Rajiv menon and jayam Ravi
Rajiv menon and jayam Ravi

Rajiv menon and jayam Ravi : தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்துக்காக போராடி தற்போது அந்த இடத்தை அடைந்திருப்பவர் ஜெயம்ரவி.

தனி ஒருவன் படத்துக்குப் பின் இவருடைய கேரியரே மாறிவிட்டது.

அந்தளவு படத்துக்கு படம் வித்தியாசமான கதையமைப்பை தேர்வு செய்து வருகிறார்.

ராதா ரவி சர்ச்சை : நயன்தாரா செய்த வேலையை போட்டுடைத்த கலா மாஸ்டர்.!

அந்தவகையில் அடுத்ததாக இவர் இயக்குநர் ராஜிவ் மேனன் இயக்கத்தில் ஒரு த்ரில்லர் படத்தில் நடிக்கபோவதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து ராஜிவ் மேனனிடம் விசாரித்தபோது, இதை அவர் முற்றிலுமாக மறுத்துள்ளார்.

அண்மையில் சர்வம் தாள மயம் படத்தை பார்த்த ஜெயம்ரவி, தன்னை வாழ்த்தியதாகவும் இதை யாரோ மாற்றி கூறிவிட்டார்கள் என்றும் அவர் கூறினார்.

பிரபுதேவா நடிப்பில் மின்சார கனவு, அஜித் நடிப்பில் கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராஜிவ் மேனன் அண்மையில் சர்வம் தாள மயம் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Rajiv menon and jayam Ravi

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.