Rajiv Gandhi Khel Ratna Awards :  Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, TNPL 2019, TNPL Match 2019

Rajiv Gandhi Khel Ratna Awards : 

இந்திய விளையாட்டுத் துறையில் சாதிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைமையில் குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம்,

முன்னாள் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்பட 12 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் முன்னாள்கிரிக்கெட் வீரர் விபி சந்திரசேகர் மரணம்!

இந்த கமிட்டி கடந்த 2 நாட்களாக டெல்லியில் கூடி ஆலோசித்தது. இதில் இந்தியாவின் ‘நம்பர் ஒன்’ மல்யுத்த வீரரும், ஆசிய, காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான பஜ்ரங் பூனியாவுக்கு மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரைப்பது என்று ஏற்கனவே ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு 2016-ம் ஆண்டு ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளி வீராங்கனையான தீபா மாலிக்குக்கு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல், அர்ஜுனா விருதுக்கு 19 பேர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, பெண்கள் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பூனம் யாதவ், தடகள நட்சத்திரங்கள் தஜிந்தர் பால் சிங் தூர், முகமது அனாஸ், ஸ்வப்னா பர்மன், தமிழ் தலைவாஸ் கபடி அணியின் கேப்டன் அஜய் தாகூர் ஆகியோரும் அடங்குவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here