ரஞ்சிதமே பாடலின் முழு வீடியோ இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக உருவாகியிருந்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது.

ரஞ்சிதமே பாடலின் வீடியோ வெளியீடு!!… உற்சாகத்துடன் வைரலாக்கும் ரசிகர்கள்.!!

ரசிகர்களால் திரையரங்கில் தற்போது வரை கொண்டாடி வரும் இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். இதில் இடம்பெற்றிருந்த அனைத்து பாடல்களையும் ரசிகர்களை கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்பாடல்களின் முழு வீடியோக்கள் ஒவ்வொன்றாக இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் உற்சாகப்படுத்தி வருகிறது.

ரஞ்சிதமே பாடலின் வீடியோ வெளியீடு!!… உற்சாகத்துடன் வைரலாக்கும் ரசிகர்கள்.!!

அந்த வகையில் சமீபத்தில் வெளியான தீ தளபதி பாடலை தொடர்ந்து ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்த பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலின் முழு ஹச் டி வீடியோ தற்போது யூடியூபில் வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் உற்சாகத்துடன் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றன.