கர்ணன் திரைப்படத்தில் சிறந்த நடிப்பால் ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து 2 தமிழ் ஹீரோக்களுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Rajisha Vijayan Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தவர் ரஜிஷா விஜயன்.

மலையாள திரையுலகைச் சேர்ந்த இவர் கர்ணன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்திருந்தார். இவருடைய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. துளியும் மேக்கப் இல்லாமல் கர்ணன் படத்தில் அவ்வளவு அழகாக நடித்து இருந்தார்.

கர்ணன் படத்தால் அடித்த ஜாக்பாட்.. அடுத்தடுத்து 2 தமிழ் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியான ரஜிஷா விஜயன் - யார் அந்த நடிகர்கள் தெரியுமா??

இதனால் கர்ணன் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிக்கும் சர்தார் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது மேலும் ஒரு முன்னணி நடிகருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

அந்த நடிகர் வேறு யாரும் இல்லை நடிகர் கார்த்தியின் சகோதரரான சூர்யா தான். கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் சூர்யா 39 படத்தில் தான் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் தனுஷின் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு முன்னணி நடிகர்களுக்கு ரஜிஷா விஜயன் ஜோடியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.