வெற்றிமாறன் மற்றும் சூரியை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் இதுவரை வெளியான படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளன.
அந்த வரிசையில் இறுதியாக வெளியான திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் சூரி கதாநாயகனாக அறிமுகமாகி யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாராட்டுகளை குவித்து வருகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விடுதலை படத்தின் முதல் பாகத்தை பார்த்து வெற்றிமாறன் மற்றும் சூரியை நேரில் அழைத்து பாராட்டி உள்ளார்.
ரஜினிகாந்தின் பாராட்டு குறித்து சூரி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்த அவரது பதிவில் இதுவரை கிடைத்த வாழ்த்துக்கள் சிகரமாக வந்தது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வாழ்த்து என பதிவு செய்துள்ளார்.
https://twitter.com/sooriofficial/status/1644573327397363715?t=xJAJTzf0h2kDYIOxyqdC6w&s=19