முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளுக்கு நடிகர் ரஜினிகாந்த் முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இந்திய திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்படும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நாளை 70வது பிறந்தநாளை கொண்டாட இருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு முன்கூட்டியே வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.

அதில் அவர், “எனது இனிய நண்பரும் மாண்புமிகு தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நீண்ட நாள் நல்ல ஆரோக்கியத்தோடும், மனநிம்மதியுடனும் இருந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று அவரது 70 வது பிறந்தநாளில் அன்போடு வாழ்த்துகிறேன்” எனக் கூறியிருக்கிறார்.