சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரானா தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளார்.

Rajinikanth Vaccinated for Covid19 : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஜினிகாந்த் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் நேற்று நடந்து முடிந்த நிலையில் ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பிய கையோடு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளார். இவர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

கொரானா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ரஜினிகாந்த் - இணையத்தில் வைரலாகும் புகைப்படம்