Rajinikanth Upcoming Movies

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

Rajinikanth Upcoming Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார். சென்னை திரும்பிய கையோடு அவர் கொரானா தடுப்பூசியின் இரண்டாவது தவணையைப் செலுத்திக் கொண்டார்.

இது ஒருபுறமிருக்க அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்த இரண்டு படங்களில் நடிக்க உள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த இரண்டு படங்களில் ஒரு படத்தை வேட்டை படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மற்றொரு படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு படங்களில் எந்தப் படம் முதலில் உருவாகப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதேசமயம் ரஜினியின் அடுத்த படத்தையும் தயாரிக்க போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் என்பது மட்டும் உறுதியாகி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.