அண்மையில் மாதவனின் நடிப்பில் வெளியான “ராக்கெட்ரி தி நம்பி எக்ஸ்போர்ட்” படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த், மாதவனுக்கு பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் பல பெண்களின் கனவு நாயகனாக உலா வந்தவர் நடிகர் மாதவன். இவர் தற்போது இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இப்படமானது இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து இயக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மாதவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் சிறப்பு கௌரவ வேடத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஷாருக்கான் இருவரும் நடித்துள்ளதாக மாதவன் முன்பே அறிவித்திருந்தார். சாம் சிஎஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த “ராக்கெட்ரி தி நம்பி” எஃபெக்ட்’திரைப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.

இந்நிலையில் இப்படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதாவது ராக்கெட்ரி திரைப்படம் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் குறிப்பாக இளைஞர்கள். நம் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி வளர்ச்சிக்காக பல துன்பங்களுக்கு உள்ளாகி, தியாகங்கள் செய்து அரும்பாடு பட்ட பத்மபூஷன் திரு நம்பி நாராயணன் அவர்களின் வரலாறறை மிகத் தத்ரூபமாக நடித்து படமாக்கி, இயக்குனராக தனது முதல் படத்திலேயே தலைசிறந்த இயக்குனர்களுக்கு இணையாக தானும் நிரூபித்திருக்கிறார் மாதவன். இப்படி ஒரு திரைப்படத்தை கொடுத்ததற்காக அவருக்கு என்னுடைய நன்றிகளும் பாராட்டுக்களும் என்று ஒரு நெகிழ்ச்சியான பதிவினை வெளியிட்டு இருக்கிறார்.