Rajinikanth Travel to America

ஜூன் 19ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னைக்கு டாட்டா சொல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Rajinikanth Travel to America : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சித்தி சிவா இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் குஷ்பு, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்துள்ளனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. விரைவில் அவர் தப்பி பணிகளையும் நிறைவு செய்து விடுவார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜூன் 19-ஆம் தேதி உடல் பரிசோதனைக்காக குடும்பத்துடன் அமெரிக்கா செல்ல உள்ளார்.

மேலும் தளர்வுகள் ; இ-சேவை, டீக்கடை, உள்பட பலவற்றிற்கு அனுமதி : தமிழக அரசு உத்தரவு

இந்தியாவில் இருந்து அமெரிக்கா வருவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் தனி விமானம் மூலம் அமெரிக்கா செல்கிறார். இதற்காக மத்திய அரசுடன் பேசி அவர் அனுமதி பெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்லும் ரஜினிகாந்த் அங்கு சிறிது காலம் ஓய்வெடுத்த பிறகு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

Vijay-யின் மகன்-மகளையும் விட்டு வைக்காத மோசடி கும்பல் – தளபதி தரப்பு விளக்கம்! | Latest Cinema News