சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் புகைப்பட கண்காட்சி அரங்கத்தை ரசித்து பார்வையிட்ட ரஜினிகாந்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பல உச்ச நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சி அரங்கத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்வையிட்டுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.