Rajinikanth Statement About Political Party

படையப்பா காமெடி ஸ்டைலில் ரஜினி அரசியல் வருகை குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rajinikanth Statement About Political Party : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழக அரசியலில் களமிறங்கி இருப்பதாக அறிவித்து இருந்தார். ஆனால் அந்த அறிவிப்போடு வேறு எந்தவித செயல்பாடுகளிலும் அவர் ஈடுபடவில்லை.

தொடர்ந்து புதிய கட்சி குறித்த அறிவிப்பை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறார். இந்த நிலையில் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் அரசியல் கட்சியை தொடங்காமல் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

ரஜினிகாந்த் எனக்கு என் உயிர் மீது பயம் இல்லை என்னை நம்பி வருபவர்கள் நலன் மீது தான் கவலை என தெரிவித்து இருந்தது மீண்டும் ஒரு தகவல் பரவியது.

இப்படியான நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் என் பெயரில் பரவிவரும் அறிக்கை என்னுடையது அல்ல. ஆனால் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகவல்கள் உண்மை.

Rajinikanth Statement About Political Party

விரைவில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசித்து விட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

படையப்பா படத்தில் மாப்பிள்ளை அவர் தான் ஆனால் அவர் போட்டுட்டு இருக்க சட்டை என்னுடையது என்ற காமெடி இடம்பெறும்.

அதேபோல் தற்போது அது என்னுடைய அறிக்கை அல்ல ஆனால் அதில் உள்ள விஷயம் உண்மைதான் என தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.

https://twitter.com/swatson2018/status/1321718140116504581?s=19