
Mee Too, சபரிமலை விவகாரம், கட்சி உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பற்றி ரஜினி பரபரப்பான பதிலை கூறியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய போது செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது Mee Too, சபரிமலை விவகாரம், கட்சி தொடங்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ரஜினி கூறியதாவது, சபரிமலை தீர்ப்பு வரவேற்கத்தக்கது தான். இருந்தாலும் ஐதீகங்களையும் பின்பற்ற வேண்டும் என கூறி செய்தியாளர்களையே அதிர வைத்துள்ளார்.
மேலும் Mee Too-வை பெண்கள் சரியாக பயன்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். டிசம்பர் மாதத்தில் கட்சி தொடங்க போவதில்லை. ஆனால் கட்சி தொடங்குவதற்கான வேலைகள் 90% முடிவடைந்து விட்டன எனவும் பதிலளித்துள்ளார்.
சபரிமலை விவகாரத்தில் இரு புறமும் கருத்து தெரிவித்ததை தான் நெட்டிசன்கள் கலாய்த்தெடுத்து வருகிகின்றனர்.