Super Star and Rajini
தர்பார் படம் பார்த்து ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷனை பற்றி முருகதாஸ் பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில் நடித்துள்ளார்.

நயன்தாரா, யோகி பாபு மற்றும் பலர் இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன, அதனை தொடர்ந்து தர்பார் படத்தின் ட்ரைலரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தர்பார் படம் பார்த்த ரஜினி படம் சூப்பரா வந்திருக்குப்பா என சென்னையில் இருந்து மும்பை வரும் வரை அதை பற்றி தான் பேசி வந்ததாக தர்பார் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.

அப்போ தலைவர் பேன்ஸ்-க்கு வெறித்தனமான கொண்டாட்டம் இருக்குனு சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.