Rajinikanth Press Meet
அரசியல் வருகை குறித்து இன்னொரு முறை அப்படி சொல்லாதீங்க என ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Rajinikanth Press Meet Speech : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களை சந்தித்த பின்னர் சிறு இடைவெளிக்கு பிறகு இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து வருகிறார்.

மாவட்ட செயலார்களை சந்தித்த பின்னர் அன்று பத்திரிகையாளர்களை சந்தித்த போது சில விசயங்களில் ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறினேன், இது பற்றி பரவி வரும் வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கவே உங்களை அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

மேலும் நான் 25 வருடமாக அரசியலுக்கு வருவேன் என கூறி வரவில்லை. கடந்த 2017 டிசம்பரில் தான் அரசியலுக்கு வருவேன் என அறிவித்தேன், சிஸ்டம் சரியில்ல என கூறினேன். சிஸ்டத்தை சரி செய்து விட்டு தான் வர வேண்டும். இல்லையென்றால் மீன் குழம்பு பாத்திரத்தை கழுவாமல் சக்கரை பொங்கல் வைத்த கதையாகி விடும்.

இனிமேல் 25 வருடமாக ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறுவதாக சொல்லாதீர்கள் என பேசியுள்ளார். மேலும் நான் கட்சி தலைவனாக தான் இருப்பேன், ஆட்சி தலைவன் இல்லை எனவும் கூறியுள்ளார், இதனால் முதல்வர் வேட்பாளர் வேறு யாரவது இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.