Rajinikanth Next Projects
Rajinikanth Next Projects

Rajinikanth Next Projects : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இறுதியாக முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

போனி கபூரின் அடுத்த தமிழ் படம்.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா?? வச்சி செய்த அஜித் ரசிகர்கள்

தற்போது கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி அளித்துள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வெகு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

Rajinikanth Angry Comment on Kantha Sasti Issue

இந்நிலையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்து யார்யாருடைய இயக்கத்தில் தொடர்ந்து நடிக்க உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளது. அவை பின்வருமாறு :

  1. ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ஒரு படம்
  2. சங்கர் இயக்கத்தில் மீண்டும் ஒரு படம் ( 3.0 )?
  3. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படம்
  4. ஏ. ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம்

இவை அனைத்தும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.