அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் டைரக்டர் பெயர் என்ன என்பது தெரியவந்துள்ளது.

Rajinikanth Name in Annathae : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. டி இமான் படத்திற்கு இசையமைக்க குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

ரோகித் விருப்பத்தை, கோலி நிறைவேற்றுவாரா?

அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரக்டர் பெயர் இதுதான் - உங்க பக்திக்கு ஒரு அளவே இல்லையா சிவா??

தீபாவளி விருந்தாக இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரக்டர் பெயர் என்ன என்பது தெரிய வந்துள்ளது. இந்த படத்தில் ரஜினிகாந்த் ஊர் தலைவராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் கணேசன் என தெரியவந்துள்ளது.

திடீரென கதறி அழுத Varalaxmi Sarathkumar – கலாய்த்த இயக்குனர்

சிறுத்தை சிவா விநாயகரின் தீவிர பக்தர் என்பதால் தன்னுடைய ஹீரோக்களின் கேரக்டர் பெயரை விநாயகருடன் தொடர்புடையதாகவே தேர்வு செய்துவந்த நிலையில் அந்த சென்டிமென்ட் அண்ணாத்த படத்திலும் தொடர்ந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் பக்திக்கு ஒரு அளவே இல்லையா சிவா என கூறி வருகின்றனர்.