ஜெயலலிதா திரைப்படத்தின் ஷூட்டிங் அப்டேட் வைரல்.

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக என்றென்றும் திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் “ஜெயிலர்” திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க ரஜினியுடன் இணைந்து பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

படப்பிடிப்பிற்காக ஹைதராபாத் சென்ற ரஜினி!!… வெளியான நியூ அப்டேட் வைரல்.!

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் 75 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தில் மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மோகன்லால் அவர்கள் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் இதற்கான படப்பிடிப்பு ஜனவரி 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் ஜெய்லர் திரைப்படத்தின் மீதம் இருக்கும் படப்பிடிப்பிற்காக நடிகர் ரஜினி சென்னையில் இருந்து ஹைதராபாத்திற்கு சென்றுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.