சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படம் குறித்து அதிரடி அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படம் குறித்து வெளியான அதிரடி அப்டேட்.!!

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து எக்கச்சக்கமாக இருந்து வந்த நிலையில் தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

லைக்கா சுபாஸ்கரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி உள்ளதால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த இரண்டு படம் குறித்து வெளியான அதிரடி அப்டேட்.!!

மேலும் ஒரு படத்திற்கான பூஜை வரும் நவம்பர் 5ம் தேதி பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இத்தகவலை லைகா தலைமை நிர்வாகி தமிழ் குமரன் தெரிவித்தார்.