ரஜினியின் கடைசி படத்தை இயக்க உள்ளார் முன்னணி இயக்குனர் ஒருவர்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதுவரை 175-க்கும் அதிகமாக படங்களில் நடித்துள்ள இவர் கடந்த சில வருடங்களாகவே இவர் நடிப்பில் ஒவ்வொரு படங்கள் உருவாகும் போது ரஜினி நடிக்கும் கடைசி படம் இதுதான் என தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

ஆனால் அது எல்லாம் தாண்டி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள நிலையில் இதுதான் ரஜினி நடிக்கும் கடைசி திரைப்படம் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து ரஜினி வேறு எந்த படத்திலும் நடிக்க போவதில்லை இனி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு ஓய்வெடுக்க போகிறார் என சொல்லப்படுகிறது.

இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர். ரஜினி தொடர்ந்து நடிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.