இந்தியன் பட சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

Rajinikanth in Indian 2 Pooja : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று இந்தியன். ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இந்தியன் பட சூட்டிங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதுவரை நீங்கள் பார்த்திராத அரிய புகைப்படம்

பல வருடங்களுக்குப் பிறகு தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படம் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. திட்டமிட்டபடி படத்தின் சூட்டிங் முடிந்து திரைப்படம் வெளியாகும் என்பது சந்தேகமாக ஒன்றாக உள்ளது.

இந்த நிலையில் இந்தியன் படத்தின் ஆரம்பக் கூட்டங்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த அரிய புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.