ஐசியூவில் இரவு முழுவதும் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Rajinikanth in Health Status : தென்னிந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சில தினங்களுக்கு முன்னர் டெல்லி சென்று திரை உலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை வாங்கினார். இதனையடுத்து அவர் குடியரசுத் தலைவர் பிரதமர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். பிறகு அந்த படத்தை தன்னுடைய குடும்பத்தாருடன் பார்த்த ரஜினிகாந்த் தன்னுடைய பேர் என்னை கட்டியணைத்து முத்தமிட்டு படம் பற்றி பேசியதாக கூறினார்.

முகமது அமிர்-ஹர்பஜன் சிங் டுவிட்டரில் எல்லை தாண்டிய மோதல்..

ஐசியூவில் இரவு முழுவதும் ரஜினிக்கு தீவிர சிகிச்சை?? எது தான் உண்மை?

இந்த நிலையில் நேற்று மாலை திடீரென இவர் காவேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினிக்கு என்ன ஆச்சு என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழத் தொடங்கின. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அஜித் படத்தையும் இப்படி தான் சொன்னாங்க! – Annaatthe Trailer Reaction

ஆனால் ரஜினிக்கு லேசான காய்ச்சல் இருந்ததால் இரவு முழுவதும் அவரை ஐசியூவில் வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதனால் எது தான் உண்மை என தெரியாமல் ரஜினி ரசிகர்கள் குழம்பிப்போய் உள்ளனர். எது எப்படி இருந்தாலும் எங்களுடைய தலைவர் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கடவுளிடம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.