தனுஷ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

Rajinikanth in Dhanush Direction : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக வரும் தீபாவளிக்கு அண்ணாத்தா என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தீபாவளி கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 ஆவது திரைப்படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா-சூரசம்ஹாரம் : பக்தர்களுக்கு அனுமதி?

அண்ணாத்த படத்தைத் தொடர்ந்து ரஜினி யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?

இந்தப் படத்தினை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனும் நடிகருமான தனுஷ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ரஜினியின் பச்சைக்கொடி காட்டி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளன.