சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Rajinikanth in DD2 : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று முடிந்தது.

இதனையடுத்து ரஜினிகாந்த் அடுத்ததாக இந்த படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டு சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல உள்ளார். அதன் பின்னர் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்கா சென்று வந்ததும் ரஜினிகாந்த் நடிகர் தனுஷ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே பா பாண்டி படத்தினை இயக்கியிருந்த தனுஷ் அடுத்ததாக ரஜினிகாந்த்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.