Rajinikanth in Annathae Shooting Spot

செம கெத்தான லுக்கில் ரஜினிகாந்த் அண்ணாத்த சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Rajinikanth in Annathae Shooting Spot : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான தர்பார் திரைப்படத்தைத் தொடர்ந்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

படக்குழுவினர் நான்கு பேருக்கு கொரானா பாதித்ததால் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

இந்த புகைப்படத்தில் ரஜினிகாந்த் செய் கெத்தான லுக்கில் இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.