rajini
இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள ரஜினிகாந்த் ரிஷிகேஷில் ரசிகர்கள் பலருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Rajinikanth himalaya tour pictures goes viral – நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய முடிவடையும் நிலையில் இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்து இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. rajini

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் தனது ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார்.

ரஜினிகாந்த பல வருடங்களாகவே இமயமலைக்கு ஆன்மிக பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

ஆனால், கடந்த வருடங்களாக இமையமலைக்கு செல்லாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

தற்போது தர்பார் படம் முடிவடைய உள்ள நிலையில் அவர் மீண்டும் இமயமலை பயணத்தை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் ரிஷிகேஷில் இருக்கிறார்.

அங்கு அவர் செல்லும் இடமெங்கும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து புகைப்படம் எடுத்து வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.