Rajinikanth Health Status 26.12.20

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல்நிலை நிலவரம் குறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Rajinikanth Health Status 26.12.20 : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்ற 4 பேருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது.

இதனை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நிலையில் அவருக்கு திடீரென ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதன் காரணமாக ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரத்த அழுத்தத்தில் மாறுபாடு உள்ளதே தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லை என நேற்று மருத்துவமனை நிர்வாகம் அறிக்கையில் தெரிவித்தது.

இதனையடுத்து இன்று வெளியாகியுள்ள அறிக்கையில் ரஜினிகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.