Rajinikanth Health Condition Details

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கொரானா தொற்று அறிகுறிகள் இருப்பதாக அதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அதுகுறித்து விளக்கம் கிடைத்துள்ளது.

Rajinikanth Health Condition Details : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த இவர் இந்த கொரானா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவர்களின் ஆலோசனைப்படி அரசியலில் ஈடுபடுவதை தவிர்த்து விட்டார்.

இருப்பினும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அவர்கள் நேற்று சென்னை வந்தபோது ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு கொரானா?? உண்மை என்ன?? வெளியான முக்கிய தகவல்.!!

இதனையடுத்து ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு லேசான கொரானா தொற்று அறிகுறிகள் இருப்பதாகவும் இதனால் அவர் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் காட்டுத் தீ போல பரவின.

இந்த நிலையில் தற்போது இது குறித்து ரஜினி தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலைக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை. அதற்கு போயஸ் கார்டன் வீட்டில் தான் இருந்து வருகிறார்.

அவருக்கு கொரானா அறிகுறிகள் இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் பொய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.