கங்குவா படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.
அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. ஆனால் சூர்யாவின் நடிப்பில் கங்குவா என்ற திரைப்படமும் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் சூர்யா கங்குவா ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த்திடம் கங்குவா பின்வாங்கியது குறித்த கேள்வி கேட்ட போது அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், சூர்யாவின் அன்பிற்கும் பாசத்திற்கும் நன்றி எனவும், அவருடைய கங்குவா படம் நிச்சயம் வெற்றிபெறும் அதற்காக நான் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது.