Thalaivar 168
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தலைவர் 168 படத்தின் லுக் என இணையத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தலைவர் 168. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ் என மூன்று நாயகிகள் நடிக்க கமிட்டாகியுள்ளனர். இவர்களில் குஷ்பூவும் மீனாவும் ரஜினிக்கு ஜோடி என கூறப்படுகிறது. மேலும் கீர்த்தி சுரேஷ் ரஜினியின் மகளாகவோ அல்லது தங்கையாகவோ நடிக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

ஏற்கனவே மீனாவின் லுக் இணையத்தில் லீக்காகி இருந்த நிலையில் தலைவர் ரஜினிகாந்தின் லுக் என புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இது பார்ப்பதற்கு தர்பார் கெட்டப் போலவும் இருப்பதால் உண்மையில் தலைவர் 168 லுக் தானா? என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது.

Thalaivar 168 Rajini

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.