Rajinikanth Emotional Speech About SPB

YouTube video

Hima Bindhu About Vijay : திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களின் பழைய புகைப்படம் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. அந்த புகைப்படத்தில் விஜயுடன் ஒரு குழந்தை இருந்தது.

அந்த குழந்தை நட்சத்திரம் யாரெனத் தெரியுமா?? அவர் தான் சமீபகாலத்தில் வெளிவந்த சீரியலான இதயத்தை திருடாதே கதாநாயகி ஹீமா பிந்து.

இதயத்தை திருடாதே என்ற சீரியல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாகி தற்போது வரை தொடர்ந்து வருகிறது.இந்தச் சீரியலில் கதாநாயகியாக வலம் வரும் ஹீமா பிந்து அண்மையில் அளித்த பேட்டியில் பழைய புகைப்படத்தில் இளையதளபதி விஜயுடன் குழந்தை நட்சத்திரமாக இருந்ததை பற்றி கேட்கையில் அவர் நான் சிறுவயதில் இருக்கும் போது நடிகர் விஜயை அங்கிள் என்று கூறுவேன் அதே போல் தற்போதும் அங்கிள் என்றே கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஹிமா பிந்து அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.