Rajinikanth Emotional on Annathae Shooting Spot

தொடர்ந்து நடிக்க ஆசை இருக்கு என அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

Rajinikanth Emotional on Annathae Shooting Spot : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் சில வாரங்களுக்கு முன்னர்தான் நிறைவுக்கு வந்தது.

தொடர்ந்து நடிக்க ஆசை.. ஆனால்? ரஜினிகாந்த் உருக்கமான பேச்சு.!!

படத்தில் படப்பிடிப்புகளை முடித்து விட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை திரும்பிய அன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்க ஆசை உள்ளது. ஆனால் உடல் நிலை விட்டு வைக்குமா என தெரியவில்லை என பேசியுள்ளார்.

மேலும் அண்ணாத்த திரைப்படம் என்னுடைய கேரியரில் முக்கியமான படம். இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பது மட்டும் தான் என்னுடைய கவலையாக இருந்தது. தற்போது ஒரு வழியாக படம் நல்லபடியாக முடிந்து விட்டது. இனி கொரானா குறைந்த பிறகு மற்ற வேலைகளைப் பார்த்துக் கொள்ளலாம். வீட்டிற்குச் சென்று அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய அடுத்த படம் பற்றிய முடிவையும் கொரானா குறைந்த பிறகுதான் அடுத்த படம் பற்றி முடிவு எடுப்பேன் என கூறியுள்ளார்.