கூலி படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் வேட்டையன் என்ற திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகி வரும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சத்யராஜ், மகேந்திரன் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் கெஸ்ட்ரோலில் அமீர்கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் கதாபாத்திரங்களை இன்று மாலை 6:00 மணிக்கு அறிவிக்கப் போவதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.