கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு குறித்து பல நாட்கள் கழித்து ரஜினிகாந்த் கண்ணீருடன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rajinikanth Condolences to Puneeth Rajkumar Death : கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகராக சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். 46 வயதாகும் இவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு இந்திய திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மறைவு.. பல நாட்கள் கழித்து கண்ணீருடன் ரஜினி வெளியிட்ட ஆடியோ.!!
திருக்கோவில்களில் 10,000 பணியாளர்கள் நியமனம் : தமிழக அரசு முடிவு

ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் புனித் ராஜ்குமார் அவர்களின் மறைவுக்கு பல நாட்கள் கழித்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்து அவருடைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்தின் ஹூட் ஆப்பில் ஆடியோ பதிவு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Suriya-வை தொடர்ந்து Vijay-யை இயக்கவிருக்கும் Siruthai Siva! – அவரே சொன்ன தகவல் | Annaatthe

அந்த பதிவு சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய நான் நலமுடன் இருக்கிறேன் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மறைந்த செய்தி கேட்டு மிகவும் துயரம் அடைந்தேன். நல்ல குழந்தை திறமையான மனிதர். நான் மருத்துவமனையில் இருந்ததால் இரண்டு நாள் கழித்து தான் எனக்கு இந்த விஷயத்தைச் சொன்னார்கள். மனசு ரொம்ப கஷ்டமாக இருந்தது. பேரும் புகழுடன் உச்சத்தில் இருக்கும்போது இந்த சிறு வயதில் நம்மை விட்டுப் பிரிந்துசென்றது வருத்தமாக இருக்கிறது. அவருடைய இறப்பு கன்னட திரையுலகிற்கு மிகப்பெரிய இழப்பு. அதை யாராலும் ஈடு கட்டவே முடியாது. புனித் ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும் என கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இந்த குரல் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.