தலைவர் 169 படத்தில் ஹீரோயின் தேர்வு விஷயத்தில் ரஜினி போட்ட கண்டிஷன் தெரியவந்துள்ளது.

Rajinikanth Condition on Thalaivar 169 : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக அண்ணாத்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டியது. இந்த படத்தை தொடர்ந்து ரஜினி அடுத்ததாக பீஸ்ட் படத்தை இயக்கியுள்ள நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தலைவர் 169 படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது. ஆனால் படத்தின் ஹீரோயினை தேர்வு செய்வதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கண்டிஷன் ஒன்றை கூறியுள்ளார்.

அதாவது படங்களில் ஹீரோயின் வயது குறைவானவர் ஆக இருந்தால் அது படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் ஆகிவிடுகிறது. ஆகையால் வயது கூடிய நடிகைகளை தான் ஜோடியாக வேண்டும் என ரஜினி கூறியுள்ளாராம்.

மேலும் அவர் நயன்தாரா, குஷ்பூ, மீனா, சிம்ரன் என சில நடிகைகளின் பெயரை பரிந்துரை செய்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. நெல்சன் இதற்கு ஓகே சொல்லி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.