திருமண விழாவில் மணமக்களை ஆசீர்வாதம் செய்யும் ரஜினிகாந்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய திரையுலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் மாபெரும் நட்சத்திரபட்டாலங்கள் இணைந்து நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களாக ஜெய் பீம் படம் இயக்குனர் ஞானவேல் ராஜாவுடன் தலைவர் 170 திரைப்படமும் லோகேஷ் கனகராஜ் உடன் தலைவர் 171 திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் நடிகர் ரஜினி பெங்களூரில் நடைபெற்ற தனது நெருங்கிய நண்பரின் மகனின் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். அப்போது மணமக்களை ஆசீர்வாதம் செய்யும் ரஜினியின் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங்காகி வருகிறது.