நடிகர் ரஜினியின் பாபா திரைப்படம் ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகும் “ஜெயிலர்” திரைப்படத்தில் தனது 169 வது படத்தை நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் ரஜினியின் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படம் தற்போது ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதற்காக இப்படத்திற்கான மறு படத்தொகுப்பு, கலர் கிரேட்டிங், ரீமிக்ஸ் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறதாம். சுரேஷ் கிருஷ்ண இயக்கத்தில் உருவாகி இருந்த இப்படத்தில் தற்போது டிஜிட்டல்மையம் ஆக்கப்பட்டிருக்கும் புதிய காட்சிகளுக்கு ரஜினி மீண்டும் டப்பிங் பேசியிருக்கிறார்.

அதோடு இப்படத்தின் இசையிலும் சில மாற்றங்களை ஏ ஆர் ரகுமான் செய்ய இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தற்போது வேகமாக புதுப்பிக்கப்பட்டு வரும் இப்படத்தை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.