ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பிறகு ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை இணையத்தில் வெளியாகி உள்ளது.

Rajinikanth Announcement About Fans Club : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இது ஒருபுறமிருக்க நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ரஜினிகாந்த் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

மீண்டும் அரசியலில் இறங்குகிறாரா ரஜினிகாந்த்?? ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு சந்தித்த பிறகு வெளியான பரபரப்பு அறிக்கை.!!

புதிய கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த முடிவை கைவிட்டார். இருப்பினும் ரஜினி ரசிகர்கள் அவரை அரசியலுக்கு தொடர்ந்து அழைத்த வண்ணம் உள்ளனர்.

இப்படி அந்த நிலைக்கு இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார் ரஜினிகாந்த். இது ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அரசியலில் ஈடுபடுவதற்காக ரஜினி நற்பணி மன்றத்தை ரஜினி மக்கள் கொஞ்சமாக மாற்றி தலைவர், செயலாளர்களை நியமித்தோம். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையால் அது நடைபெறவில்லை. இனியும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. இதன் காரணமாக மீண்டும் ரஜினி மக்கள் மன்றத்தை கலைத்து ரஜினி நற்பணி மன்றம் என்ற பெயரில் செயல்படு என தெரிவித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.