Kadaisi Vivasayi Secrets : Rajinikanth, Vetrimaaran, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema NewsKadaisi Vivasayi Secrets : Rajinikanth, Vetrimaaran, Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News , Tamil Cinema News
நடிகர் ரஜினி மதுரையில் மாநாட்டை நடத்தி தனது கட்சி பெயரை அறிவிக்கவுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

Rajinikanth announce polytical party name – அரசியலுக்கு வருகிறேன் என நடிகர் ரஜினி அறிவித்து ஒன்றரை வருடங்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

2021 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடும் என அறிவித்த ரஜினி இன்னும் தனது கட்சி பெயரை கூட அறிவிக்கவில்லை.

அதோடு, தொடர்ந்து அவர் சினிமாவில் மட்டுமே நடித்து வருகிறார். எனவே, அவர் மீது கடுமையான விமர்சனமும், கிண்டலும் எழுந்து வருகிறது.

ஆரம்பமே அசத்தல்…ரஜினியின் மெகா அரசியல் திட்டம்… பீதியில் அரசியல் கட்சிகள்

இந்நிலையில், வருகிற பொங்கல் பண்டிகை நேரத்தில் மதுரையில் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அந்த மாநாட்டில் ரஜினி தனது கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. அதற்கான ஏற்பாட்டை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

சினிமாத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்த விஜயகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் மதுரையில் மாநாடு நடத்தியே தனது கட்சி பெயரை அறிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.