Rajinikanth Admitted in Hospital

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Rajinikanth Admitted in Hospital : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கொரானா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில் இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு மாதங்கள் முடிந்து விட்ட நிலையில் கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களுக்கு ஒருநாள் பரிசோதனை மேற்கொண்ட போது நால்வருக்கு பாசிட்டிவ் என கண்டறியப்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.

அவருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. மேலும் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை. இருந்தபோதிலும் அவர் தனிமையில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக அவர் ஹைதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் அவருக்கு எந்தவித கொரானா அறிகுறியும் இல்லை. ரத்த அழுத்தத்தில் மட்டும் மாறுபாடு ஏற்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.