கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை குறித்து ரஜினிகாந்த் சொன்ன வார்த்தை இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Rajinikanth About Covid19 Second Wave : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிடுவோம் என அறிவித்திருந்தார். ஆனால் இவர் நடித்து வந்த அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்களில் சிலருக்கு கொரானா தொற்று ஏற்பட்டது. ரஜினிகாந்த்துக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அன்றே சொன்ன ரஜினி.. கொரானாவின் இரண்டாவது அலை குறித்து இணையத்தில் டிரெண்டாகும் சூப்பர் ஸ்டாரின் கடிதம்.!!

அதன் பின்னர் இவர் தன்னுடைய அரசியல் பிரவேசத்தை கைவிடுவதாக அறிவித்தார். இதை பற்றி நாலு பேர் நான்கு விதமாக பேசுவார்கள் ஆனால் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை. என்னை நம்பி வருபவர்களை நான் பலிகடாவாக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

‌மேலும் அவர் வெளியிட்ட கடிதத்தின் இறுதியில் கொரானாவின் இரண்டாவது அலை வந்து கொண்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் அன்றே கணித்த ரஜினி என சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் செய்து இது குறித்து குறிப்பிட்டு வருகின்றனர்.

‌தன்னுடைய சுயநலத்திற்காக அரசியலுக்கு வராமல் மக்களின் நலனுக்காக அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகின்றனர்.

அன்றே சொன்ன ரஜினி.. கொரானாவின் இரண்டாவது அலை குறித்து இணையத்தில் டிரெண்டாகும் சூப்பர் ஸ்டாரின் கடிதம்.!!