Rajini Vs Seeman

Rajini Vs Seeman : இயக்குனரும் நாம் தமிழர் கட்சி தலைவருமான சீமான் ரஜினியெல்லாம் தலைவரா? என பேசியதற்கு ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தியாவில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அரசியலுக்கு படையெடுத்து வருவது வழக்கமாகி விட்டது. தற்போதும் கூட ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ் ராஜ் என பலர் அரசியலில் குதித்துள்ளனர்.

“தாமரை மலராது, படர் தாமரை வேண்டுமானால் மலரும்” : சீமான் கிண்டல் பேச்சு!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறேன் என்ற அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பில் இருந்தே ரசிகர்கள் பலரும் அவரை தலைவா என கூறி தொடங்கி அரசியலுக்கு வாங்க என கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சீமான் அவர்கள் திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ரஜினியெல்லாம் தலைவரா? அப்போ அம்பேத்கர், பிரபாகரன் இவர்களெல்லாம் யார்?

நடிகனை தலைவர் என கொண்டாடும் தமிழர்கள் கூட்டம் உருப்படாது என விளாசி இருந்தார். இதனால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் இருந்து சீமானுக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வந்தன.

உங்களுக்கு தான் பேச தெரியுமா? சீமானை வெளுத்து வாங்கிய விஜய் ரசிகை – வைரலாகும் வீடியோ.!

அதனை தொடர்ந்து தற்போது ட்விட்டரில் #RajiniEngalThalaivar #ThalaivarAattam என பல ஹேஸ்டேக்குகளை உருவாக்கி சீமானுக்கு பதிலடி கொடுத்ததும் கண்டங்களை வெளிப்படுத்தியும் வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.