2019-ல் அதிகம் சம்பாதித்த நடிகர்களின் லிஸ்டை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிகை.
ஒவ்வொரு வருடமும் போர்ப்ஸ் பத்திரிகை அதிகம் சம்பாதித்த 100 இந்திய பிரபலங்களின் லிஸ்டை வெளியிடுவது வழக்கமான ஒன்று.
இந்த வருடத்திற்கான லிஸ்ட்டை போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் விஜய் 47-வது இடத்திலும் அஜித் 52-வது இடத்திலும் இடம் பிடித்துள்ளனர்.
மேலும் ரஜினிகாந்த் 13-வது இடத்தை பிடித்திருந்தார். இவர் இந்த வருடத்தில் சம்பாதித்தது ரூ 100 கோடி என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விஜய் ரூ 30 கோடி சம்பாதித்துள்ளார். தல அஜித் ரூ 40.5 கோடி சம்மதித்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விசியம் என்னவென்றால் அஜித் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் மூலமாக ரூ 40 கோடியை ஈட்டியுள்ளார்.
விஜய் பிகில் என்ற ஒரே படத்தின் மூலமாக ரூ 30 கோடி ஈட்டியுள்ளார் என்பது தான்.