Rajinikanth Reduced His Salary
தர்பார் நஷ்டத்தால் ரஜினி அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

Thalaivar 168 Salary Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான தர்பார் படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க இம்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்திற்காக ரஜினி ரூ 100 கோடி சம்பளம் கேட்டு இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் ரூ 75 கோடி கொடுக்க ஒப்பு கொண்டதாகவும் தகவல்கள் வைரலாகி இருந்தன.

தற்போது தர்பார் நஷ்டம் என விநியோகிஸ்தர்கள் கூறி வருவதாலும் தயாரிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்கவும் ரஜினி தன்னுடைய சம்பளத்தை குறைத்து கொண்டதாக பிரபல பத்திரிகை ஒன்று செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.