Rajinikanth

Rajini Press Release : மகளின் திருமணம் முடிந்ததும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்திற்கு நேற்று விசாகன் என்பவருடன் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், ரஜினிகாந்தின் நண்பர்கள், உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணமும் நல்ல படியாக நடந்து முடிந்ததை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தன்னுடைய மகளின் திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி கூறியுள்ளார்.

Rajini Press Release

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.