தர்காவில் ஏ ஆர் ரகுமானுடன் பிரார்த்தனை செய்த ரஜினியின் வீடியோ வைரல்.

கோலிவுட் திரை உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், சிவ ராஜ்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

கடப்பா தர்காவில் போடப்பட்ட பலத்த பாதுகாப்பு!!… ஏ ஆர் ரகுமானுடன் பிரார்த்தனை செய்த ரஜினியின் வீடியோ வைரல்.!

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்த பிறகு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானுடன் இணைந்து தர்காவில் பிரார்த்தனை செய்துள்ளார்.

கடப்பா தர்காவில் போடப்பட்ட பலத்த பாதுகாப்பு!!… ஏ ஆர் ரகுமானுடன் பிரார்த்தனை செய்த ரஜினியின் வீடியோ வைரல்.!

அதாவது, ஆந்திர மாநிலம் கடப்பாவிலுள்ள பிரசித்தி பெற்ற அமீன் தர்காவுக்கு இசைப்புயல் ஏ ஆர் ரகுமானுடன் நடிகர் ரஜினி சென்று பிரார்த்தனை செய்திருக்கிறார். இதற்காக அந்த தர்காவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அவர்களை தர்கா நிர்வாகம் பிரம்மாண்டமாக வரவேற்றுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களால் வைரலாகி வருகிறது.