Rajini opens about Nadigar Sangam Election
Rajini opens about Nadigar Sangam Election

நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து தபால் மூலம் வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

Rajini opens about Nadigar Sangam Election – நடிகர் சங்கத்தை நிர்வகித்து வந்த விஷால் தலைமையிலான அணியின் பதவி காலம் நிறைவடைந்த நிலையில்,

2019 முதல் 2022 வரையிலான அடுத்த 3 ஆண்டுகளுக்கு நடிகர் சங்கத்தை நிர்வகிக்க நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த பிக் பாஸ் சீசனின் போட்டியாளர்கள் யார் தெரியுமா? முழு பட்டியல் இதோ!

இதில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணிக்கும் பாக்கியராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது.

முன்னதாக நேற்று நடிகர் ரஜினிகாந்த் மும்பையில் இருந்து தபால் மூலம் வாக்களிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினி, அதில் நான் இப்பொழுது மும்பையில் படப்பிடிப்பில் இருக்கிறேன் தபால் சீட்டு தாமதமாக கிடைத்ததால் வாக்களிக்க இயலவில்லை, இதை எண்ணி மிகவும் வருந்துகிறேன் இதுபோன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.