சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Rajini Next With Desingu : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் யாருடைய இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்த்து ரசிகர்கள் உள்ளத்தில் அதிகமாகவே இருந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இது குறித்த தகவல் ஒன்று கிடைத்துள்ளது அதாவது ரஜினிகாந்த் அடுத்ததாக கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை பார்த்த ரஜினிகாந்த் தேசிங்கு பெரியசாமிக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தது மட்டுமல்லாமல் தனக்கு ஒரு கதையை உருவாக்குமாறு கூறியிருந்தார். இதனால் தேசிங்கு ரஜினிகாந்திற்கு ஒரு கதையை தயார் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் உண்மை என்ன? இந்த கூட்டணி அமையுமா என்பதெல்லாம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரியும்.