Thalaivar 167 First Look

Thalaivar 166 Villian : ரஜினி, முருகதாஸ் இணைய உள்ள படத்தின் வில்லன் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பேட்ட திரைப்படத்தை அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

தளபதி 63-ல் எனது கதாபாத்திரம் – ரகசியத் தகவலை போட்டுடைத்த நடிகர்.!

லைகா நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்க உள்ளார்.

நேற்று இப்படத்திற்காக ரஜினிகாந்த் போலீஸ் கெட்டப்பில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்காகி வைரலாகி இருந்தன.

மகளின் திருமண கொண்டாட்டத்தில் ஆட்டம் போட்ட ரஜினி – வெளியான வீடியோ.!

இதனையடுத்து தற்போது இப்படத்தின் வில்லன் குறித்த தகவலும் கிடைத்துள்ளது. ஆம், முருகதாஸின் ஸ்பைடர், அட்லீயின் மெர்சல் ஆகிய படங்களில் வில்லனாக நடித்து மிரட்டி இருந்த எஸ்.ஜே சூர்யாவை தான் வில்லனாக நடிக்க வைக்க முருகதாஸ் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

SJ Suriya

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.