Thalaivar 166 Update

Thalaivar 166 Update : சூப்பர் ஸ்டாருடன் முருகதாஸ் இணைய உள்ள புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் முருகதாஸ். முன்னணி நடிகர்களான அஜித், விஜய், சூர்யா, விஜயகாந்த் என பலரையும் இயக்கி விட்டார்.

சமீபத்தில் தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து சர்கார் படத்தை இயக்கி இருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அரசியல் படம் ஒன்றை இயக்க உள்ளார். 2.O படத்தை தயாரித்த லைகா நிறுவனமே இப்படத்தையும் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது இந்த படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்படத்தின் படப்பிடிப்புகள் 2019-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாம்.

அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து படம் 2020-ல் வெளியாகும் எனவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து விரைவில் எதிர்பார்க்கலாம். ரஜினி, முருகதாஸ் கம்போவை கொண்டாட நீங்க தயாரா?

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.